பர்கூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்
By கிருஷ்ணகிரி, | Published on : 20th July 2013 04:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பர்கூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பர்கூர் வட்டார வள மையத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு மருத்துவ முகாமை உதவித் திட்ட அலுவலர் மோகன் தொடக்கிவைத்தார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரங்கநாதன் தலைமை வகித்தார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சம்பத், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜோஸ்பின்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மாணவ, மாணவிகளை பரிசோதித்து உதவி உபகரணங்கள் பெற பரிந்துரை செய்தனர்.
36 பேருக்கு தேசிய அடையாள அட்டையும், 232 பேருக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களும் வழங்கப்பட்டன.