Enable Javscript for better performance
பாமக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்- Dinamani

சுடச்சுட

    

    பாமக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்

    By கிருஷ்ணகிரி  |   Published on : 20th July 2013 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாமக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பேருந்து எரிக்கப்பட்டதாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகேயுள்ள ரெட்டிப்பட்டியைச் சேர்ந்த கண்ணன், ஆட்டோ பழனி, திப்பம்பட்டியைச் சேர்ந்த சரவணன், குமரேசன் ஆகிய 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்களின் குடும்பத்தினரை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அன்புமணி ராமதாஸ், தலா ரூ.10 ஆயிரம் ரொக்கம், அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கிப் பேசியது:

    பாமகவைச் சேர்ந்த 122 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்து விடுமோ என்ற பயத்திலும் எங்களை ஒடுக்கவே அரசு கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

    தருமபுரி இளைஞர் இளவரசன் உயிரிழந்தது தொடர்பாக நீதி விசாரணைக் கோரும் திமுக தலைவர் கருணாநிதி, மரக்காணத்தில் 2 பேர் உயிரிழந்தது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், கிருஷ்ணகிரி தொகுதியில் பாமக அதிக அளவு வாக்குகள் பெற கட்சியினர் பாடுபட வேண்டும்.

    2016-இல் தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வரும். அப்போது, பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றார் அன்புணி ராமதாஸ்.

    பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைப் பொதுச் செயலர் மாதேஸ்வரன், மாநில துணைத் தலைவர் த.அ.மேகநாதன், மாவட்டச் செயலர் தர்மலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai