Enable Javscript for better performance
துர்க்கை அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    துர்க்கை அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 21st July 2013 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : கிருஷ்ணகிரி காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

    நிகழாண்டில், ஆடி வெள்ளிக்கிழமை மாலை திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

    இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, 108 திருவிளக்குகளில் தீபம் ஏற்றி, தாலி பாக்கியம் நிலைக்கவும், மழை வளம் பெருகி, வறுமை நீங்கவும், உலக அமைதிக்காகவும் வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    பின்னர், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, குங்கும அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai