Enable Javscript for better performance
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 21st July 2013 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சூளகிரி ஊராட்சி நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 406 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    சூளகிரி ஒன்றியத்தில் உள்ள 7 அரசுப் பள்ளிகளில் படிக்கும் 200 மாணவர்கள், 206 மாணவிகளுக்கு இந்தியக் குழந்தைகள் நலச் சங்கம் சார்பில் புத்தகப் பைகள், புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    இதற்கு இந்தியக் குழந்தைகள் நலச் சங்கத் திட்டக் கண்காணிப்பாளர் ஆபிரகாம் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் பாஸ்கரன் உரையாற்றினார். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் துரைசாமி, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.

    விழாவில், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கிருஷ்ண தேஜாஸ், கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் செல்வராஜ், ஐசிசிஐ வங்கியின் சென்னையைச் சேர்ந்த விஜயன், தன்னர்வு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த முரளி, ஆரோக்கியம், லட்சுமி நாராயணன், கார்த்திக், லட்சுமி, சென்றாயன், வெங்கட்ராஜ், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்தியக் குழந்தைகள் நலச் சங்கத் திட்ட மேலாளர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai