Enable Javscript for better performance
பாரூர் பெரிய ஏரியிலிருந்து இன்று பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    பாரூர் பெரிய ஏரியிலிருந்து இன்று பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 21st July 2013 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்காக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) தண்ணீர் திறக்கப்படுகிறது.

    மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ், தண்ணீரைத் திறந்து வைக்கிறார்.

    பாரூர் பெரிய ஏரியில் இருந்து கிழக்குப் பிரதான வாய்க்கால் மற்றும் மேற்குப் பிரதான வாய்க்கால்களிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால், பாரூர், அரசம்பட்டி, பென்டரஹள்ளி, கீழ்குப்பம், புலியூர், கோட்டப்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி, விருப்பம்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் உள்ள சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

    இதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பொதுப் பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai