Enable Javscript for better performance
ேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் சங்கம் உறுதி- Dinamani

சுடச்சுட

    

    ேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்கள் சங்கம் உறுதி

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 21st July 2013 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொதுத் தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தப் பாடுபடுவோம் என, தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்க நிர்வாகிகள் உறுதியளித்தனர். 

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்றுள்ள ராமசாமியை, தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் அன்பரசன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

    அப்போது, மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்புத் தேர்ச்சி சதத்தை அதிகரிக்க, முதன்மைக் கல்வி அலுவலர் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிக்கும் ஆசிரியர்கள் உறுதுணையாக இருப்பதாகவும், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த முழு முயற்சியில் ஈடுபடுவதாகவும் உறுதியளித்தனர்.

    இதில், அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பெருமாள், மாவட்ட அமைப்புச் செயலாளர் சண்முகம், மாவட்டப் பொருளாளர் சரவணன், ஊத்தங்கரை வட்டாரச் செயலாளர் பெருமாள், மத்தூர் வட்டாரப் பொருளாளர் இளவரசு மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai