சாலை விதிகளை மீறியதாக 342 பேர் மீது வழக்கு
By கிருஷ்ணகிரி, | Published on : 22nd July 2013 03:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதாக 342 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, ஒசூர், தேன்கனிக்கோட்டை, பர்கூர் மற்றும் ஊத்தங்கரை உள்ளிட்ட காவல் உள்கோட்ட எல்லைப் பகுதிகளில் போலீஸார் சனிக்கிழமை ரோந்து சென்றனர். அப்போது, மது போதையில் வாகனம் ஓட்டிய 12 பேர் மீதும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய 81 பேர் மீதும், தலைக்கவசம் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய 109 பேர் மீதும் மற்றும் பல்வேறு ஆவணங்கள் இன்றி வாகனங்களை ஓட்டிய 140 பேர் என மொத்தம் 342 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.