Enable Javscript for better performance
முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஊராட்சி செயலர்கள் தீர்மானம்- Dinamani

சுடச்சுட

    

    முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஊராட்சி செயலர்கள் தீர்மானம்

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 22nd July 2013 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணி வரன்முறை உள்ளிட்ட சலுகைகள் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, ஊராட்சி செயலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் குமரேசன் தலைமை வகித்தர். மாநிலப் பொதுச் செயலாளர் ராஜா, மாநிலப் பொருளாளர் சரவணன், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள் கழகம் (சி மற்றும் டி பிரிவு)  மாவட்டத் தலைவர் மூர்த்தி, மாவட்டப் பொருளாளர் ஆனந்தன், மாவட்ட இணைச் செயலாளர்கள் நாகராஜ், முகிலன், மாவட்ட மேலவை பிரதிநிதி சக்கரவர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், தமிழ்நாடு ஊராட்சி செயலர்களுக்கு பணி வரன்முறை உள்பட பல சலுகைகளை வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் மற்றும் இயக்குநர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai