Enable Javscript for better performance
ஒசூரில் இரு வீடுகளில் 35 பவுன் நகைத் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஒசூரில் இரு வீடுகளின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    ஒசூர் மஞ்சுநாதா லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (40). இவர் ஒசூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவர் குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீட்டுóக்குச் சென்று விட்டு செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில், சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராம்நகரில் 5 பவுன் திருட்டு: ஒசூர் ராம்நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (42). தனியார் நிறுவன ஊழியரான இவர், வீட்டைப் பூட்டிவிட்டு ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் சென்றார்.

    மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஒசூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai