Enable Javscript for better performance
ஒசூர் பிஎம்சி கல்லூரியில் விநாடி- வினா போட்டி- Dinamani

சுடச்சுட

    

    ஒசூர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் விநாடி- வினா மற்றும் பல்திறன் போட்டிகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் தலைவர் பெ.பெருமாள் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலாளர் பெ.குமார், அறங்காவலர் பெ.மலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பொது அறிவுத் திறன், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்ந்த விநாடி- வினா, நினைவாற்றல் திறன், ஒரு நிமிஷ தமிழ்ப் பேச்சு, நடிப்பு ஆகியவை மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.

    இதில் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுககு கல்லூரிச் செயலர் பெ.குமார் பரிசுகளை வழங்கினார். பாலிடெக்னிக், ஐடிஐ இயக்குநர் சுதாகரன் சிறப்புரையாற்றினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai