Enable Javscript for better performance
கிருஷ்ணகிரியில் ரூ.50 ஆயிரம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரியில் ரூ.50 ஆயிரம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 24th July 2013 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் பகுதிகளில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பான் மசாலா, புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து அழித்தனர்.

    கிருஷ்ணகிரி நகரம், காவேரிப்பட்டணம் பகுதிகளில் உள்ள கடைகளில் மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி தலைமையில், வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ராஜசேகர், சாமிநாதன், துளசிராமன், சிவசந்திரன் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.

    இந்த சோதனையில், 0 சதம் நிகோடின் அல்லது புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதற்கு மாவட்ட நியமன அலுவலரின் அனுமதி பெற வேண்டும்.

    மேலும், ஆய்வகப் பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்ட பிறகு விற்பனை செய்ய வேண்டும். அவ்வாறு அனுமதியில்லாமல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு அலுவலர் கலைவாணி எச்சரித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai