Enable Javscript for better performance
கோயில்களில் பூட்டை உடைத்து கொள்ளை: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோயில்களில் பூட்டை உடைத்து கொள்ளை: இளைஞர் கைது

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 24th July 2013 05:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி பகுதியில் கோயில்களில் கொள்ளையடித்த இளைஞரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி பகுதியில் கடந்த சில நாள்களாக கோயில்களின் பூட்டை உடைத்து கொள்ளைடிக்கப்பட்டு வந்தது.

    இதில் தொடர்புடையவர்களைப் பிடிக்க கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் அன்புமணி தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில், கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனிப் படையினர் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனர்.

    அப்போது பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர், கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்த சிவா (எ) குரங்கு சிவா (26) என்பதும் தெரிய வந்தது. மேலும், அவர் கிருஷ்ணகிரி, மகாராஜகடை பகுதிகளில் உள்ள கோயில்களின் பூட்டை உடைத்தும், உண்டியலை உடைத்தும் கொள்ளையடித்தது தெரிய வந்தது.

    இதையடுத்து, சிவாவை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து பணம், அம்மன் கழுத்தில் கிடந்த தங்கத் தாலி உள்ளிட்ட ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai