Enable Javscript for better performance
மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை- Dinamani

சுடச்சுட

    

    மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 24th July 2013 05:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற கணவருக்கு, கிருஷ்ணகிரி நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (28). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி (25). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

    சரவணனுக்கு மது பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில், 7-8-2010 அன்று இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த சரவணன், ஜெயந்தியிடம் தகராறில் ஈடுபட்டாராம்.

    அப்போது, சரவணன் வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை ஜெயந்தியின் மீது ஊற்றி தீ வைத்தாராம்.

    உடல் கருகிய நிலையில் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயந்தி, தீவிர தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவர் சரவணன் குறித்து வாக்குமூலம் அளித்தார்.

    இந்த நிலையில், அங்கு சேர்க்கப்பட்ட மறுநாள் ஜெயந்தி உயிரிழந்தார்.

    இதுகுறித்து போச்சம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து சரவணனைக் கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி யூசுப்அலி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. சரவணனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai