Enable Javscript for better performance
மாணவர்கள் ரத்த சேவை அமைப்பு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவும் வகையில் மாணவர்கள் ரத்த சேவை அமைப்பு திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வித்யா ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.

    டிஎஸ்பி ம.சந்தானபாண்டியன் அமைப்பை தொடக்கிவைத்துப் பேசியது:

    ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களை இணைக்கும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்டம் அமைந்துள்ளது.

     மேலும், 5 தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் இடமாகவும் கிருஷ்ணகிரி உள்ளது.

    இந்தச் சாலைகளில் அடிக்கடி வாகன விபத்துகள் நிகழ்கிறது.

    இதில் பெரும்பாலானவர்கள் அதிக ரத்த போக்கின் காரணமாக உயிரிழக்கின்றனர்.

    இந்த அமைப்பு விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் வழங்கி உயிரைக் காப்பாற்றுவதில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

    அமைப்பில் உறுப்பினராக உள்ள மாணவர்கள் போதை, புகையிலை பழக்கத்துக்கு அடிமையாகக் கூடாது என்றார் அவர்.

    மது, புகையிலை தவிர்ப்பு குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    முன்னதாக, அமைப்பின் முதல்வர் ஹரிகிருஷ்ணன் வரவேற்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai