Enable Javscript for better performance
ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    பொதுத் துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசைக் கண்டிப்பதாகக் கூறி, தென்மண்டல ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் நடைபெற்றது.
     தமிழகம், கேரளம், புதுச்சேரி பகுதிகளை உள்ளடக்கிய எல்.ஐ.சி. ஊழியர்களின் தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர்கள் கூட்டமைப்பின் 32-ஆவது மாநாடு ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது.
     இதையொட்டி, 1500 கி.மீ. விழிப்புணர்வு பிரசார பயணம் அந்தச் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
     கிருஷ்ணகிரி செவ்வாய்க்கிழமை வந்த இந்தக் குழுவினர் அங்குள்ள எல்.ஐ.சி. அலுவலகப் பகுதியில் பிரசாரத்தை தொடங்கினர். பின்னர், வட்டச்சாலை வழியாக பழையபேட்டை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டனர்.
     தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் அகோரம், வங்கி ஊழியர்கள் சங்கம் ஹரிராஷ், சிஐடியு குணசேகரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
     பொதுத் துறையான எல்.ஐ.சி. உள்ளிட்ட நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும், பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்கக் கோரியும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai