Enable Javscript for better performance
என்.எல்.சி. விவகாரம்  முதல்வருக்கு  அண்ணா தொழில்சங்கம் நன்றி- Dinamani

சுடச்சுட

    

    என்.எல்.சி. விவகாரம்  முதல்வருக்கு  அண்ணா தொழில்சங்கம் நன்றி

    By  கிருஷ்ணகிரி  |   Published on : 25th July 2013 11:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    என்.எல்.சி. விவகாரத்தில் தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்வு கண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்ட அண்ணா தொழில்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
     கிருஷ்ணகிரி மாவட்ட அண்ணா தொழில்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் நாகராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
     மாவட்டச் செயலர் கே.மாதேவா, மண்டலச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணா தொழில்சங்கப் பேரவை மாநில துணைத் தலைவர் கோவிந்தராஜ் பங்கேற்று பேசினார்.
     கூட்டத்தில், என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை தடுத்து தொழிலாளர்களுக்கு சாதகமான தீர்வு கண்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
     மேலும், வருகிற 28-ஆம் தேதி ஒசூரில் அண்ணா தொழில்சங்கம் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     அண்ணா போக்குவரத்து சங்க மண்டல தலைவர் காதர்செரீப், அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் இளஞ்சூரியன், ஆவின் அண்ணா தொழில்சங்க மாநில துணைத் தலைவர் கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     முன்னதாக, டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலாளர் சிவகுமார் வரவேற்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai