Enable Javscript for better performance
ஒற்றை யானையை விரட்டும் பணியில் தொய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஒசூரில் கும்கி யானைகளைக் கொண்டு ஒற்றை யானையை விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மயக்க ஊசி செலுத்தி ஒற்றை யானையைப் பிடிக்க மத்திய அரசின் அனுமதிக்காக வனத் துறையினர் காத்திருக்கின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலுள்ள அசோக்

    லேலண்ட் தொழில்சாலையின் பின்புறமுள்ள தோட்டத்தில் கடந்த 18 நாள்களாக சுற்றித் திரியும் ஒற்றை யானையை விரட்ட கோவை மாவட்டத்திலிருந்து 3 கும்கி யானைகள் புதன்கிழமை வரவழைக்கப்பட்டன.

    அவற்றை கொண்டு ஒற்றை யானையை விரட்டும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டனர். கும்கி யானைகளைக் கண்ட ஒற்றை யானை, தோட்டத்திலுள்ள முள்புதரை விட்டு வெளியே வரவில்லை. மேலும், புதன்கிழமை மாலை மழை பெய்யத் தொடங்கியதால், யானையை விரட்டும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில், இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காலை ஒற்றை யானை சுற்றித் திரியும் பகுதிக்கு 3 கும்கி யானைகளுடன் வனத் துறையினர் சென்றனர்.

    இதைக் கண்ட ஒற்றை யானை முள்புதருக்குள் சென்றது. அங்கிருந்து வெளியே கொண்டு வர வனத் துறையினர் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

    கும்கி யானைகளும் முள்புதர் வரை சென்றுவிட்டு திரும்பி விடுகின்றன. இதனால், ஒற்றை யானையை விரட்ட முடியாத நிலை நீடிக்கிறது.

    இதையடுத்து, ஒற்றை யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து, லாரியில் ஏற்றி வனப் பகுதியில் கொண்டு போய் விட மத்திய அரசிடம் அனுமதி கேட்டு ஒசூர் கோட்ட வன அலுவலர் உலகநாதன் பேக்ஸ் அனுப்பியுனார்.

    மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், கர்நாடக மாநிலம், பன்னர்கட்டாவிலிருந்து மருத்துவரை வரவழைத்து மயக்க ஊசி செலுத்தி ஒற்றை யானையைப் பிடிக்கும் பணி தொடங்கும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai