Enable Javscript for better performance
கிருஷ்ணகிரி வட்டத்தில் 63 போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி வட்டத்தில் 63 போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிப்பு

    By கிருஷ்ணகிரி  |   Published on : 26th July 2013 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள 4 நியாய விலைக்கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 63 போலி குடும்ப அட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி வட்ட வழங்கல் அலுவலர் பி.விஜயராகவன், மகாராஜகடை, பெரியசக்னாவூர், முலுக்கலப்பள்ளி, பாலேகுளி ஆகிய 4 நியாய விலைக்கடைகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில், மகராஜகடை நியாய விலைக்கடையில் 35 குடும்ப அட்டைகளும், பெரியசக்னாவூர் நியாய விலைக்கடையில் 17 குடும்ப அட்டைகளும், முலுக்கலப்பள்ளி நியாய விலைக்கடையில் 10 குடும்ப அட்டைகளும், பாலேகுளி நியாய விலைக்கடையில் ஒரு குடும்ப அட்டையும் என மொத்தம் 63 குடும்ப அட்டைகள் போலி குடும்ப அட்டைகள் என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த குடும்ப அட்டைகளுக்கு பொது விநியோக திட்ட பொருகள் நிறுத்தம் செய்ய அவர் உத்தரவிட்டார்.

    மேலும், போலி குடும்ப அட்டைகள் குறித்த விவரத்தை கிருஷ்ணகிரி வட்ட வழங்கல் அலுவலகம், அந்தந்த கிராம நிர்வாக அலுவலகம், சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடை ஆகிய இடங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.

    மேலும், போலி குடும்ப அட்டைகள் என குறிப்பிடப்பட்டு பொருள் நிறுத்தம் செய்யப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் ஒரு வார காலத்திற்குள் கிருஷ்ணகிரி தனி வட்டாட்சியர் (குடிமை பொருள் வழங்கல்) அலுவலருக்கு மேல்முறையீடு செய்யலாம். தவறும் பட்சத்தில் அனைத்து குடும்ப அட்டைகளும் போலி அட்டைகள் என கருதி அந்த குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai