Enable Javscript for better performance
தரம் குறைந்த உரம் விவசாயிகளுக்கு விநியோகிக்கக் கூடாது: வேளாண்துறை உதவி இயக்குநர் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தரம் குறைந்த உரம் விவசாயிகளுக்கு விநியோகிக்கக் கூடாது: வேளாண்துறை உதவி இயக்குநர் வலியுறுத்தல்

    By கிருஷ்ணகிரி  |   Published on : 26th July 2013 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தரம் குறைந்த உரம் மற்றும் மருந்துகளை விவசாயிகளுக்கு விநியோகிக்கக் கூடாது என வேளாண் உதவி இயக்குநர்(தரக்கட்டுபாடு) பச்சியப்பன் வலியுறுத்தினார்.

    கிருஷ்ணகிரியில் உரம் மற்றும் பூச்சி மருந்து பயன்பாடுகள் குறித்த சிறப்பு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கிற்கு தலைமை வகித்து அவர் பேசியது: நிகழ் பருவத்தில் அண்டைய மாநிலமான கர்நாடகாவில் அதிக மழை பெய்துள்ளதால் தமிழகத்தின் நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்து வரும் தருவாயில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி அணை, பாரூர் பெரிய ஏரி உட்பட அனைத்து நீர்நிலைகளிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தருணத்தில் பயிர் சாகுபடிக்கு அடிப்படை தேவையான உரங்கள் ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்ட தனியார் உர விற்பனை மையங்களிலும், 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலமாகவும், தழை, மணி, சாம்பல் சத்துக்கள் உள்ளடக்கிய உரங்கள் அனைத்தும் பயிருக்கு ஏற்றவாறு இருப்பு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மொத்த உர விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் ரூ.2,250 அரசுக்கு பணம் செலுத்தியும், சில்லரை விற்பனையாளர்கள் ரூ. 1,250 அரசுக்கு செலுத்தி, சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து வேளாண்மை உதவி இயக்குநருக்கு (தரக்கட்டுப்பாடு) விண்ணப்பித்து உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும். உர உரிமம் பெற்று உர விநியோகம் செய்ய வேண்டும். உரிமம் அதிகாரிகள் பார்வையில் படும்படி கடையில் வைக்க வேண்டும். உரம் விலைப்பட்டியில் விவசாயிகள் பார்வையில் படும்படி கடையின் முன் பகுதியில் வைக்க வேண்டும். உரம், பூச்சி மருந்துகள் தனித்தனியான பதிவேடுகள் வைத்து வரவு வைக்க வேண்டும். இருப்பு விவரங்கள் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். உரம் வாங்கும் விவசாயிகளுக்கு ரசீது அளிக்க வேண்டும். தரம் குறைவான உரம், பூச்சி மருந்துகளை விற்பனை செய்ய கூடாது என்று கூறினார்.

    இந்த கருத்தரங்களில் வேளாண்மை அலுவலர்கள் நாசர்அலி, சிவநிதி, கணேஷ்குமார், கணேசமூர்த்தி, கண்ணன், லோகநாயகி, ரமணகீதா, செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று தொழில்நுட்ப செய்திகளையும், சட்ட விதிகளையும் எடுத்துரைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai