பாஜக பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் புகார்:விசாரணை துவக்கம்
By கிருஷ்ணகிரி | Published on : 26th July 2013 04:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பாஜக மாநில துணைத் தலைவர் முனவரி பேகம் அளித்த கொலை மிரட்டல் புகார் மீது போலீஸ் விசாரணை துவங்கியது.
கிருஷ்ணகிரி அருகே பாஞ்சாலியூரைச் சேர்ந்தவர் முனவரி பேகம். இவர் பாஜகவின் மாநிலதுணைத் தலைவர் மற்றும் சிறுபான்மை பிரிவு தேசிய துணைத்தலைவராகவும் உள்ளார். இவருக்கு கடந்ச இரு நாள்களுக்கு முன் தொடர்ந்து வெவ்வேறு செல்போன் எண்கள் மூலம் கொலை மிரட்டல் வந்ததாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமாரிடம் புதன்கிழமை புகார் மனு அளித்தார்.
இதையடுத்து அவருக்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மேலும், அவரது புகார் குறித்து கிருஷ்ணகிரி வட்டார காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரது புகார் தொடர்பாக காவல் ஆய்வாளர் சந்திராகாந்தா விசாரணை நடத்தி வருகிறார். மேலும், முனவரிபேகத்திற்கு வந்த செல்போன் எண்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், அவருக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.