Enable Javscript for better performance
போலி கையெழுத்து: கிராம நிர்வாக அலுவலர்கள் புகார்- Dinamani

சுடச்சுட

    

    போலி கையெழுத்து: கிராம நிர்வாக அலுவலர்கள் புகார்

    By கிருஷ்ணகிரி  |   Published on : 26th July 2013 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நல வாரியங்களில் உறுப்பினர்களாக சேர தங்களது கையெழுத்தை போலியாக போட்டுள்ளதாக கிராம நிர்வாக அலுவலர்கள் போலீஸிஸ் புகார் அளித்துள்ளனர்.

    கிருஷ்ணகிரியில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் நல அலுவலகத்திற்கு உறுப்பினர்களாக சேர ஏராளமான விண்ணப்பங்கள் அண்மையில் வந்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் குறித்து உண்மை நிலை அறிய தொழிலாளர் நல அலுவலகம், சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு அந்த விண்ணப்பங்களை அனுப்பியது.

    இதில், ஊத்தங்களை அருகே உள்ள ரெட்டிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி, பனமரத்துப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ரம்யா ஆகியோர், அவர்களது அலுவலகத்திற்கு வந்த விண்ணப்பங்களில் உள்ள கையெழுத்து போலியாக போட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து இரு கிராம நிர்வாக அலுவலர்களும் கல்லாவி காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai