Enable Javscript for better performance
அனுமதியின்றி மதுக்கூடம் நடத்திய 12 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி மதுக்கூடம் நடத்திய 12 பேர் கைது

    By கிருஷ்ணகிரி  |   Published on : 27th July 2013 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுக்கூடம் நடத்திய 6 பெண்கள் உள்பட 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளத்தனமாக நடத்தப்படும் மதுக்கூடங்களை அப்புறப்படுத்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பியோதங்கதுரை, உதவி ஆணையர் (கலால்) மல்லிகா, மதுவிலக்கு பிரிவு போலீஸார் ஆகியோர் வெள்ளிக்கிழமை கூட்டுத்தணிக்கை மேற்கொண்டனர்.

    இதில், பாரூர், மஞ்சமேடு, அரசம்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளின் அருகில் அனுமதியின்றி மதுக்கூடம் நடத்திய அரசம்பட்டி ராஜேந்திரன்(49), வெங்கடேஷ்(45), பிரபு(29), ராமக்கா(50), கெüரி(35), சாலம்மாள்(50), வாடகாசி முருகன்(42), வாடமங்கலம் சக்தி(39), பலனம்பாடி ஜீவானந்தம்(35), மஞ்சமேடு மாதம்மாள்(35), ரஞ்சிதம்(50), ஜிங்கில்கதிரம்பட்டி சின்னபாப்பா(35) ஆகிய 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai