Enable Javscript for better performance
ஒசூரில் பாஜக மாநில நிர்வாகிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஒசூரில் பாஜக மாநில நிர்வாகிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

    By கிருஷ்ணகிரி  |   Published on : 27th July 2013 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பாஜக மாநில நிர்வாகிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    ஒசூர் ரயில் நிலையம் அருகில் உள்ள நேரு நகரை சேர்ந்தவர் நரேந்திரன். இவர் பாஜவின் மாநிலத்துணைத் தலைவராக உள்ளார். இவருடைய பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய 2 போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கடந்த 3 நாள்களாக இவருக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

    சேலத்தில் பாஜகவின் மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து பாஜக மற்றும் இந்து இயக்கங்களை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

     இதனடிப்படையில் ஒசூரைச் சேர்ந்த பாஜக மாநில துணைத்தலைவர் நரேந்திரனுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai