Enable Javscript for better performance
கிருஷ்ணகிரியில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிப்புறக்கணிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரியில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிப்புறக்கணிப்பு

    By கிருஷ்ணகிரி  |   Published on : 27th July 2013 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரியில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

    இதில், வழக்குரைஞர்கள் மீது அண்மை காலமாக காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதாகக்கூறியும், வழக்குரைஞர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறக்கோரியும் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் தங்களது பணிகளை புறக்கணித்தனர்.

    இதேபோல, ஒசூர், தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதியில் உள்ள நீதிமன்றங்களிலும் வழக்குரைஞர்கள் தங்களது பணிகளை புறக்கணித்தனர். மேலும், புறக்கணிப்பின் போது, காவல் துறையை எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai