Enable Javscript for better performance
நீதிமன்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    நீதிமன்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு பயிற்சி

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 28th July 2013 03:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் அமைச்சுப் பணியாளர்களுக்கு சனிக்கிழமை இரண்டாம் கட்ட பயிற்சி வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்டத்தில் உள்ள 18 நீதிமன்றங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களான உதவியாளர்கள், கிளார்க் நிலை-3 மற்றும் பதிவறை காப்பாளர் ஆகியோர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.

    மாவட்ட முதன்மைக் குற்றவியல் நடுவர் தமிழரசன் தலைமை வகித்தார்.

    மாவட்ட நீதிபதி சம்பத் மற்றும் சிறப்பு மாவட்ட நீதிபதி சத்திகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்கு கோப்புகள், பல்வேறு பதிவேடுகளை முறையாகப் பராமரிப்பது, வழக்கில் தாக்கல் செய்யும் மனுக்களை எவ்வாறு கோப்புக்கு எடுப்பது, அன்றாட பணியை எவ்வாறு மேற்கொள்வது, நீதிமன்றத்தில் பணியாளர்களுக்கு உரிய பங்களிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்தப் பயிற்சியைக் கூடுதல் சிறப்பு நீதிபதி சுபத்ராதேவி, சிறப்பு சார்பு நீதிபதி அசோகன் ஆகியோர் அளித்தனர்.

    இதில், மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிபதிகளும் பங்கேற்றனர். பயிற்சி வகுப்பில் கூடுதலாக சுருக்கெழுத்தாளர்கள், தலைமை எழுத்தர்கள் மற்றும் துணை நாசர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai