Enable Javscript for better performance
விவசாயிகளுக்கு ஆக.8-இல் புதிய சாகுபடி குறித்த பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகளுக்கு ஆக.8-இல் புதிய சாகுபடி குறித்த பயிற்சி

    By கிருஷ்ணகிரி  |   Published on : 28th July 2013 03:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வாழை, தக்காளி சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது குறித்த இலவசப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக எலுமிச்சங்கிரி டாக்டர் பெருமாள் வேளாண் அறிவியல் ஆராய்சி மைய ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தராஜ் தெரிவித்தார்.

    இதுகுறித்த அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு வாழை மற்றும் தக்காளியில் உகந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது குறித்து இலவசப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி வாழை குறித்தும், ஆகஸ்ட் 29-ஆம் தேதி தக்காளி குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், வருகிற 3-ஆம் தேதிக்குக்குள் தபால் மூலமோ அல்லது தொலைபேசி மூலமோ முன் பதிவு செய்ய வேண்டும். தொடர்புக்கு:96595 57716, 89037 89738.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai