Enable Javscript for better performance
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி அருகேயுள்ள நக்கல்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (28). இவருக்கும், ஒசூர் அருகே கீரனப்பள்ளியைச் சேர்ந்த முனியப்பன் மகள் அகிலாவுக்கும் (22) கடந்த 11 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். சனிக்கிழமை ஏற்பட்ட தகராறில் அகிலா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொண்டதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    அகிலாவின் சாவுக்கு சந்தோஷ்தான் காரணம் எனக் கூறி, கந்திகுப்பம் காவல் நிலையத்தில் அகிலாவின் தாய் சாந்தி ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார்.

    இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்தனர். கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai