Enable Javscript for better performance
குடிநீர் பிரச்னை: பொதுமக்கள் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மாவட்டம், வெப்பாளம்பட்டி அருகே சீரான குடிநீர் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

    போச்சம்பள்ளி அருகே வெப்பாளம்பட்டி ஊராட்சியில் உள்ளது ஆஞ்சநேயர் கோயில் பகுதி. இந்தப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதிக்கு ஊராட்சி நிர்வாகம் அங்குள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது.

    இந்த நிலையில், ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் கடந்த சில நாள்களாக சரிவர குடிநீர் விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள், வெப்பாளம்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனராம். எனினும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் போச்சம்பள்ளி-

    சந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போச்சம்பள்ளி போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலைக் கைவிட்டு பொதுமக்கள கலைந்து சென்றனர்.

    கடந்த சில நாள்களில் இதே ஊராட்சியில், சீரான குடிநீர் கோரி ஆவிளக்கம்பட்டி, வன்னியர்புரம் ஆகிய இரு பகுதிகளில் சாலை மறியல் நடைபெற்றது

    குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai