Enable Javscript for better performance
சட்ட விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    போச்சம்பள்ளியைச் சேர்ந்த வட்ட சட்டப் பணிகள் குழு, பாரூர் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற இந்த சட்ட விழிப்புணர்வு முகாமுக்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி

    எம்.சீனிவாசன் தலைமை வகித்தார்.

    பள்ளித் தலைமையாசிரியர் (பொறுப்பு) முரளி, பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர்கள் நாராயணசாமி, கிருபானந்தம், வழக்குரைஞர்கள் கலையரசன், பீமராஜ், கபிலன், அசோக்குமார், வெங்கடேசன், ஜெயபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    முகாமில் கல்வி உரிமைச் சட்டம், தகவல் அறியும் சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai