Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் தொலைக்காட்சிப் பெட்டி திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பள்ளியில் தொலைக்காட்சிப் பெட்டி திருட்டு

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 30th July 2013 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அரசுப் பள்ளியில் மர்ம நபர்கள் தொலைக்காட்சிப் பெட்டியைத் திருடி சென்றனர்.

    புலியூரில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக நிர்மலா  பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில், சனிக்கிழமை வழக்கம் போல பள்ளி தலைமை ஆசிரியர் அறையைப் பூட்டி விட்டுச் சென்றனர். பின்னர், திங்கள்கிழமை காலை தலைமை ஆசிரியர் அறை பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட தலைமை ஆசிரியர் நிர்மலா, உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்குள்ள 2 பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும், அங்கிருந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் பாரூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai