Enable Javscript for better performance
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆறாவது ஊதியக் குழுவின் முரண்பாடுகளைக் களையக் கோரி, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் எம்.பாஸ்கரன் தலைமை வகித்தார். நகரக் கிளை பொருளாளர் யாரப்பாஷா, வட்டார மகளிரணி செயலர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பிரிவு செயலர் மு.மாதன், வட்டாரச் செயலர் மா.ராவணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், ஆறாவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும். ஆசிரியர்களுக்கு எதிராக அறிக்கை அளித்துள்ள தமிழக அரசு நியமித்த 3 நபர் குழுவைக் கண்டிப்பது உள்ளிட்ட 12-அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    நகரக் கிளை துணைத் தலைவர் டி.திருப்பதி உள்பட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai