Enable Javscript for better performance
இளம்பெண் தற்கொலை:  கணவர், மாமியார் கைது- Dinamani

சுடச்சுட

    

    ிருஷ்ணகிரி அருகே இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர், மாமியாரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி அருகேயுள்ள நக்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ். இவரது மனைவி அகிலா(22). இவர்களுக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சந்தோஷ் பூ அலங்கார வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி அகிலா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, அகிலாவின் தாயார் சாந்தி, தனது மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அவரது கணவர், மாமியார் ஆகியோர் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதால், மனமுடைந்த அகிலா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கந்திகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகார் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அகிலாவிற்கு திருமணமாகி 11 மாதங்களே ஆவதால் அவர் இறந்தது குறித்து கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் மனோகரனும் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கந்திகுப்பம் காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி, அகிலாவின் கணவர் சந்தோஷ் மற்றும் மாமியார் விஜியா ஆகியோரை கைது செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai