உரிமம் இன்றி வெடிபொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை
By கிருஷ்ணகிரி, | Published on : 30th July 2013 04:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உரிமம் இன்றி வெடிபொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கிருஷ்ணகிரி காவல் துணைக் கண்காணிப்பாளர் ம.சந்தானபாண்டியன் எச்சரிக்கை விடுத்தார்.
கிருஷ்ணகிரியில் டி.எஸ்.பி. அலுவலகத்தில் வெடிபொருள்கள் விற்பனையாளர்களுடன் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை வகித்து டி.எஸ்.பி. ம.சந்தானபாண்டியன் பேசியது:
வெடிபொருள்கள் இருப்பு வைத்துள்ளவர்கள் விதி 24-இன் படி பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். உரிமம் உள்ளவர்கள் மட்டுமே வெடிபொருள்களை விற்பனை செய்ய வேண்டும். வாங்கும் நபர்களின் புகைப்படம், முகவரி பராமரிக்கப்பட வேண்டும். விதிமுறைகளின்படி இருப்பு, விற்பனை விவரம் மற்றும் பதிவேடுகள் உரிமத்தில் உள்ளவாறு பராமரிக்கப்பட வேண்டும். அத்துடன் விதிமுறைகளை மீறி நடப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
காவல் ஆய்வாளர்கள் அன்புமணி, வெங்கடாசலம், ஜெய்சங்கர், ஜாபர்உசேன் மற்றும் வெடிபொருள் கிடங்கு, பட்டாசுக் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.