Enable Javscript for better performance
ஒசூரில் தனியார் பள்ளியில் ரூ. 30 ஆயிரம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஒசூரில் ஜான்போஸ்கோ தொடக்கப் பள்ளியில் கதவை உடைத்து, பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    ஒசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் புனித ஜான்போஸ்கோ தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் உள்ள அலுவலகத்தில் உள்ள பீரோவில் தலைமை ஆசிரியர் நிர்மலா மேரி சனிக்கிழமை ரூ.30 ஆயிரம் பணத்தை வைத்துவிட்டுச் சென்றாராம். அவர் திங்கள்கிழமை காலை பள்ளிக்கு வந்த போது அலுவலகக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவுக்குள் இருந்த ரூ.30 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, ஒசூர் நகரக் காவல் நிலையத்தில் அவர் புகார் தெரிவித்தார்.

    இதுகுறித்து நகரப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai