Enable Javscript for better performance
சுயஉதவிக் குழுவினருக்கு தொழில் முனைவோர் பயிற்சி - Dinamani

சுடச்சுட

    

    சுயஉதவிக் குழுவினருக்கு தொழில் முனைவோர் பயிற்சி

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 30th July 2013 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், புளியம்பட்டியில் சுயஉதவிக் குழுவினருக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

    கிருஷ்ணகிரி, டாக்டர் பெருமாள் வேளாண் அறிவியல் மையம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில், பழங்கள், காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரித்தல் மற்றும் மசாலா தூள், பால் பொருள்கள் தயாரித்தல், காளான் வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

    முதல் நாள் நடைபெற்ற பயிற்சி முகாமில், பெருமாள் வேளாண் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தரராஜ் பங்கேற்று முகாமைத் தொடக்கி வைத்துப் பேசினார்.

    பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எல்.தேவகி, உதவித் திட்ட அலுவலர் விஷ்ணுகுமார், ஆகியோர் பயிற்சியளித்தனர்.

    35 உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த முகாம் 45 நாள்கள் நடைபெறும்.  முன்னதாக, பூபதி வரவேற்றார். ரமேஷ்பாபு நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai