Enable Javscript for better performance
தமிழ்நாடு விவசாயிகள் சங்க சிறப்பு மாநாடு- Dinamani

சுடச்சுட

    

    தேன்கனிக்கோட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க சிறப்பு மாநாடு திங்கள்கிழமை தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    தேசிய விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் அதுல்குமார் அஞ்ஜான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், சிவகங்கை தொகுதி எம்எல்ஏ குணசேகரன், மாவட்டச் செயலாளர் பி.சி.நஞ்சப்பா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் எம்,லகுமைய்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:

    விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தாமல், விவசாயிகள் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வரும் மத்திய அரசைக் கண்டிக்கிறோம். வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும். விவசாயிகளுக்கு மான்ய விலையில் டீசல் வழங்க வேண்டும். அரசுப் புறம்போக்கு நிலங்களில் பயிர் செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக நடைபெற்ற பேரணியில் பல ஆயிரம் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai