Enable Javscript for better performance
வீட்டு மனைப் பட்டா கோரி திருநங்கைகள் மனு- Dinamani

சுடச்சுட

    

    வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷிடம், 15-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

    மனு விவரம்: கிருஷ்ணகிரி அருகே பாஞ்சாலியூரில் வாடகை வீட்டில் தற்போது வசித்து வருகிறோம். எங்களுக்கு இதுவரை வீட்டுமனை, குடும்ப அட்டை, நலவாரிய அட்டை, ஓய்வூதியம் என்று எந்த வகையான அரசு சலுகைகளும் வழங்கப்படவில்லை. திருநங்கைகள் என்பதால் எங்களுக்கு வாடகைக்கு வீடுகூட தர மறுக்கின்றனர்.

    எனவே, திருநங்கைகளான எங்களுக்கு வீட்டுமனை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai