Enable Javscript for better performance
ஒசூரில் பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஒசூரில் பஜ்ரங்தள் கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளரை போலீஸார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஒசூர் ஜனப்பர் தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ் (32). இவர் பஜ்ரங்தள் அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளராக உள்ளார்.

    இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகுந்து ரகளை செய்ததாகக் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், 30.07.2010-இல் சூளகிரி புனித வேளாங்கண்ணி மாதா கோயில் மீது கல் வீசி, நாற்காலி, பெஞ்சுகளை கொளுத்திய வழக்குத் தொடர்பாக தேவராஜை போலீஸார் கைது செய்து ஒசூர் முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர்.

    அவரை ஒரு நாள் காவலில் வைத்து, புதன்கிழமை ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, ஒசூர் கிளை சிறையில் தேவராஜ் அடைக்கப்பட்டார்.

    நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த போலீஸார் அழைத்து வந்த போது, போலீஸாரை கண்டித்து, தேவராஜின் குடும்பத்தினர் ரகளையில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai