Enable Javscript for better performance
கட்டுமானத் தொழிலாளர்கள் மறியல்: 36 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கட்டுமானத் தொழிலாளர்கள் மறியல்: 36 பேர் கைது

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 31st July 2013 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிதிப் பலனை காசோலைகளாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் 36 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன் சிஐடியு மாவட்டக் குழு அமைப்புசாரா, கட்டுமானத் தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற மறியலுக்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் பீட்டர் தலைமை வகித்தார். கட்டுமானத் தொழில்சங்க மாவட்டத் தலைவர் மதன், மாவட்டத் துணைச் செயலாளர் குமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், தொழிலாளர் நல வாரியத்தில் பலன்களைப் பெற, வருவாய் அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழை வலியுறுத்துவதைக் கைவிட வேண்டும்.

    தொழிலாளியை ஒவ்வொரு முறையும் அலுவலகத்திற்கு நேரில் வரச் சொல்வதைக் கைவிட்டு, தொழில்சங்கம் மூலம் விண்ணப்பிக்கும் பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.

    நிதிப் பலனை தொழிலாளிக்கு காசோலையாக வழங்க வேண்டும். பதிவு செய்யும் போதே வங்கிக் கணக்கு தொடங்க வலியுறுத்துவதைக் கைவிட வேண்டும்.

    உயர்ந்து வரும் செலவுகளுக்கேற்ப நிதிப் பலன்களை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்பட 36 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai