Enable Javscript for better performance
 திமுக எம்பி செல்வகணபதி மீது கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு- Dinamani

சுடச்சுட

    

     திமுக எம்பி செல்வகணபதி மீது கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு

    By கிருஷ்ணகிரி  |   Published on : 01st November 2013 03:38 AM  |   அ+அ அ-   |    |  

    திமுக எம்பி செல்வகணபதி மீது தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வழக்கு பதியப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே கடந்த மே மாதம் 15-ஆம் தேதி அன்று திமுக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் எம்பியும், தலைமை கழகச் செயலாளருமான செல்வகணபதி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசினாராம்.

    இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் என்.கதிரேசன் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, செல்வகணபதி வரும் 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப நீதிபதி யூசூப் அலி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai