சுடச்சுட

  

   முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

  By கிருஷ்ணகிரி  |   Published on : 01st November 2013 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரியில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

  கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 28-ஆம் தேதி முதல் மூனறு நாள்கள் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.  ஆண்கள், பெண்கள் என தனித்தனியே தடகளம் மற்றும் குழுப் போட்டிகள் நடைபெற்றன.

  தடகளப் போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பி.கார்த்திகேயனும், 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் எஸ்.குப்புசாமியும், உயரம் தாண்டுதலில் தனபாலும்,  நீளம் தாண்டுதலில் கே.வினோத் குமாரும், குண்டு எறிதலில் வி.கிரனும் முதலிடம் பெற்றனர்.

  பெண்களுக்கான போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் நிவேதிதாவும், 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பி.மீனாவும், உயரம் தாண்டுதலில் ஜி.பிரியாவும், நீளம் தாண்டுதலில் ஆர்.கீதாவும் முதலிடம் பெற்றனர். குழுப் போட்டியான கையுந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் அரசம்பட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும், பெண்கள் பிரிவில் கிருஷ்ணகிரி புனித ஜான் பாஸ்கோ பள்ளி அணியும், கால்பந்து போட்டியில்  பெண்கள் பிரிவில் அரசு மகளிர் கலைக் கல்லூரி அணியும் வெற்றி பெற்றன.

  வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் பரிசாக காசோலைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai