சுடச்சுட

  

   வன்கொடுமைச் சட்டம் தொழிலாளிக்கு 6 மாதம் சிறை

  By கிருஷ்ணகிரி  |   Published on : 01st November 2013 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் 6 மாதம் சிறைதண்டனையை வியாழக்கிழமை வழங்கியது.

  கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சூரியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (37). இவரது மகளும், அதேப் பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண் நண்பருடன் 2010-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி நகரப் பேருந்தில் காரிமங்கலத்திலிருந்து சாப்பாணிப்பட்டிக்கு சென்றனர்.

  அப்போது அந்த வழியாக சைக்கிளில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் உறவினர் இளவரசன் அந்தப் பெண்ணுக்கு டாட்டா காட்டினாராம்.

  இதை அண்ணாமலையின் மகள்,  இளவரசன் தனக்கு டாட்டா காட்டியதாக தந்தையிடம் புகார் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை, இளவரசனின் வீட்டுக்கு சென்று தகாத வார்த்தியில் திட்டியும், தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இளவரசன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வன்கொடுமைச் சட்டத்தின் வழக்குப் பதிந்து,  அண்ணாமலையை கைது செய்தனர்.

  இந்த வழக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி யூசூப் அலி,  இளவரசனை சாதிப் பெயரை கூறி திட்டியதற்கு 6 மாத சிறையும், ரூ.1,000 அபராதமும், மேலும் இளவசனை தாக்கியதற்கு ரூ. 1,000 அபராதமும், இதைக் கட்டத்தவறினால் 6 மாத சிறை தண்டனையை வழங்கி உத்தரவிட்டார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai