Enable Javscript for better performance
கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் டி.எம்.செல்வகணபதி எம்.பி. மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் டி.எம்.செல்வகணபதி எம்.பி. மீது வழக்கு

    By கிருஷ்ணகிரி  |   Published on : 01st November 2013 03:40 AM  |   அ+அ அ-   |    |  

    கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக டி.எம்.செல்வகணபதி எம்.பி. மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.

    கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே கடந்த மே மாதம் 15-ஆம் தேதி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.பி.யும், கட்சியின் தலைமைக் கழகச் செயலருமான டி.எம்.செல்வகணபதி தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசினாராம்.

    இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் என்.கதிரேசன் வியாழக்கிழமை வழக்குத் தொடர்ந்தார்.

    இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணைக்காக செல்வகணபதி நவம்பர் 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப நீதிபதி யூசூப் அலி உத்தரவிட்டார்.

    kattana sevai