சுடச்சுட

  

  ஒன்றிய அளவிலான மகளிர் விளையாட்டு  போட்டி: நவம்பர் 7-இல் தொடக்கம்

  By  கிருஷ்ணகிரி,  |   Published on : 04th November 2013 12:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அளவிலான மகளிர் விளையாட்டுப் போட்டிகள் வருகிற 7, 8-ஆம் தேதிகளில் இரண்டு நாள்கள் நடைபெற உள்ளதாக, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.
   இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அளவிலான மகளிர் விளையாட்டுப் போட்டிகள் வரும் வியாழன், வெள்ளிக்கிழமை என இரு நாள்கள் நடைபெற உள்ளன. வரும் வியாழக்கிழமை (நவ.7) ஓசூர் ஊராட்சி ஒன்றியத்துக்கானப் போட்டிகள் ஓசூரில் உள்ள மினி விளையாட்டு அரங்கிலும், பர்கூரில் வேளாங்கண்ணி மெட்ரிக். பள்ளியிலும், வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கானப் போட்டிகள் மனவாரனபள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கானப் போட்டிகள் தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், சூளகிரியில் வேளாங்கண்ணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும், தளி ஊராட்சி ஒன்றியத்துக்கானப் போட்டிகள் பெலகொண்டப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும்.
   வரும் வெள்ளிக்கிழமை (நவ.8) கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கானப் போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்திலும், மத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கானப் போட்டிகள் மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், காவேரிப்பட்டணத்துக்கானப் போட்டிகள் காவேரிப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்துக்கானப் போட்டிகள் ஊத்தங்கரை மினி விளையாட்டு மைதானத்திலும் நடைபெறும். தடகளம், வாலிபால், கபடி, நீச்சல் ஆகிய போட்டிகள் நடைபெறும். வயது வரம்பு கிடையாது. போட்டிகளில் தேர்வு செய்யப்படும் வீராங்கனைகள் மாவட்ட, மாநில அளவிலானப் போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவர்.
   இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் போட்டி நடைபெறும் நாள்களில் காலை 9 மணிக்குள் சென்று, தேர்வுப் போட்டில் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai