சுடச்சுட

    

    கூடைப்பந்துப் போட்டி: ஒசூர் கல்லூரி சிறப்பிடம்

    By  ஒசூர்  |   Published on : 04th November 2013 12:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியார் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற ஆண்களுக்கான கூடைப்பந்துப் போட்டியில் ஒசூர் எம்.ஜி.ஆர். கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக வென்று சாதனை படைத்தனர்.
     பெரியார் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற ஆண்களுக்கான கூடைப் பந்து போட்டி சேலம் ஏ.வி.எஸ். கல்லூரியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், சுமார் 10 அணிகள் பங்கேற்றன. இதில், ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி அணி அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்றது. இந்தப் போட்டியில், எம்.ஜி.ஆர் கல்லூரி நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக வென்று சிறப்பிடத்தைப் பெற்றது.
     வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் கல்லூரி அணிக்கு பரிசு, கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் டாக்டர் அ.முத்துமணி, அதியமான் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத், கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மற்றும் உடல்கல்வி இயக்குநர் மு.பழனிஜோயல் ஆகியோர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai