சுடச்சுட

  

  ஆற்றைக் கடக்க முயன்ற  மூதாட்டி நீரில் முழ்கிச் சாவு

  By  கிருஷ்ணகிரி  |   Published on : 05th November 2013 10:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணை ஆற்றைக் கடக்க முயன்ற மூதாட்டி நீரில் முழ்கி உயிரிழந்தார்.
   காவேரிப்பட்டணம் அருகே உள்ள தொட்டிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கெவரன். இவரது மனைவி சரஸ்வதி (70). இவர் கடந்த சனிக்கிழமை அன்று நெடுங்கல் அருகே தென்பெண்ணை ஆற்றைக் கடக்க முயன்றார். அப்போது அவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து, அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தொட்டிப்பள்ளம் கிராமத்தில் ராஜேஷின் தென்னந்தோப்பு அருகே ஆற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை மூதாட்டி சரஸ்வதியின் சடலம் ஒதுங்கியது. தகவல் அறிந்த போலீஸார், அங்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர்.
   இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai