Enable Javscript for better performance
ஒடிஸா தொழிலாளி அடித்துக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    ஒடிஸா தொழிலாளி அடித்துக் கொலை

    By  ஒசூர்,  |   Published on : 05th November 2013 10:44 AM  |   அ+அ அ-   |    |  

    ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒசூர் அருகே திங்கள்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
     ஒடிஸா மாநிலம், கஞ்சாம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஞ்சன்செட்டி (35). இவர் ஒசூர் அருகே கலுகொண்டப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
     இவர், திங்கள்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில் தொழில்சாலை வளாகத்தில் கிடந்தார்.
     அவரை தலையில் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
     மேலும், முகமும் சிதைக்கப்பட்டுள்ளது.
     அவரை அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவரது உறவினர் கொன்றிருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
     இதுகுறித்து ஒசூர் டி.எஸ்.பி. கோபி மற்றும் மத்திகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    kattana sevai