சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தனியார் நிறுவனத்தில் காப்பர் வயர் திருடியதாக ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
     பர்கூரை அடுத்த பிஆர்ஜி மாதேப்பள்ளி கிராமத்தில் சாலைப் பணிகளை மேற்கொண்டுள்ள தனியார் நிறுவனம் தாற்காலிகமாக அலுவலகத்தை அமைத்துள்ளது. இந்த நிறுவனத்தில் பாதுகாவல் அலுவலராக பர்கூரைச் சேர்ந்த முனியப்பன் (58) பணிபுரிந்து வருகிறார்.
     இந்தநிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை பணியில் இருந்த போது, அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஒடிஸா மாநிலம், ரைலகா வட்டம், கடேர்பால் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி புதுவாமின் (42), ஒரு பையில் 25 கிலோ காப்பர் வயர்களைத் திருடிச் சென்றாராம்.
     அப்போது அவரைக் கையும் களவுமாகப் பிடித்து, கந்திக்குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
     இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, புதுவாமினை கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai