சுடச்சுட

    

    டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த  அரசு மருத்துவமனைகளில் நில வேம்பு கசாயம்

    By  கிருஷ்ணகிரி  |   Published on : 05th November 2013 10:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் நில வேம்பு கசாயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் டி.பி. ராஜேஷ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
     கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது, டெங்கு காய்ச்சல், பிற காய்ச்சல்களைக் கட்டுப்படுத்தும் வகையில், நில வேம்புக் கசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு நில வேம்புக் கசாயத்தை ஆட்சியர் டி.பி.ராஜேஷ் வழங்கிப் பேசியது:
     டெங்கு போன்ற காய்ச்சலுக்கு நில வேம்பு கசாயம் சிறந்த மருந்து. இதைத் தொடர்ந்து 5 நாள்களுக்கு காலை, மாலை என குடிக்க வேண்டும்.
     இந்தக் கசாயத்தில் நில வேம்பு, சீந்தில், பற்படாகம், வெட்டி வேர் உள்ளிட்ட 9 மூலிகைகள் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நில வேம்புக் கசாயம் வழங்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த நில வேம்புத் துகளை, மருத்துவமனைகளில் பெற்று வீட்டிலும் அருந்தலாம். இதன் மூலம், டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல்களிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார் அவர்.
     இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.பாலசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ப.மத்திராசலம், அரசு தலைமை மருத்துவமனை சித்தா மருத்துவர் என்.மஞ்சுஹேமாமாலினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai