சுடச்சுட

    

    பெண்கள் குளித்ததை படம் எடுத்த  5 இளைஞர்கள் மீது வழக்கு

    By  ஊத்தங்கரை  |   Published on : 05th November 2013 11:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊத்தங்கரை அருகே கோயில் சுனையில் குளித்த பெண்களை செல்போனில் படம் எடுத்தவர்களைத் தட்டிக் கேட்டவர்களை தாக்கிய ஐந்து இளைஞர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
     கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்துள்ள ஜவ்வாதுமலை அருகே அங்குத்தி சுனையில் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திருவிழா காலங்களில் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக வந்து வழிபட்டுச் செல்கின்றனர். அதேபோல, தீபாவளி அன்று கைலாயபுரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கோயிலுக்குச் சென்றனர். அங்குள்ள சுனையில் பெண்கள் குளித்தனர். அப்போது, அங்கு வந்த ராஜ், ஆனந்தன் அவரது நண்பர்கள் சேர்ந்து பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்தனராம். அதைப் பார்த்த கைலாயபுரத்தைச் சேர்ந்தவர்கள் தட்டிக் கேட்டனராம். அவர்களை ராஜ், ஆனந்தன், அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த கைலாயபுரத்தைச் சேர்ந்த 5 பேர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
     இதுகுறித்து சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai